Followers

Thursday, November 14, 2019

குழந்தைகள் தின விழா

இன்று எஸ் எஸ் கே வி  சாலா ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா  எம்பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்களும் , நமது பாரம்பரிய விளையாட்டான கண்ணாம்பூச்சி, நொண்டி அடித்தல், பாண்டி விளையாடுதல், கொலை கொலையா முந்திரிக்கா, கிச்சுகிச்சு தாம்பாளம், முறுக்கு கடித்தல் , பலூன் உடைத்தல் ,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுக்கள் குழந்தைகளுடன் விளையாட செய்து குழந்தைகளை மகிழ்வித்தனர் . மேலும் இன்று இரவு ஏழு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை நம் அனைத்து தொழில்நுட்ப சாதனங்களான கைபேசி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற காரியங்களை ஒதுக்கிவிட்டு பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடன் நம் இனிமையான தருணங்களை செலவிட பெற்றோரிடம் கூற குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசியர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்கள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர் குழந்தைகள் அனைவரும் தனக்கு விருப்பமான பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள்தினவிழா வாழ்த்துக்கள்.


















No comments:

Post a Comment