Followers

Thursday, October 3, 2024

Friday, July 19, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன .வகுப்பிற்கு தன்னார்வலராக செல்வி இசக்கிகிளி அவர்கள் நடத்தி வருகிறார்கள். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்று எழுத்தறிவு முழுமையாக பெற்று நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் தன்னார்வலர் இசக்கிகிளிக்கு பாராட்டுக்கள்.

Friday, July 5, 2024

நமது பள்ளி செயலர்

இன்று எங்கள் பள்ளி தலைவர் பள்ளி செயலர் திரு T.P.S.H. பார்த்திபன் ராம் சேட் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து ஆசிரியர்கள் எங்கள் அனைவருக்கும் பள்ளி செயல்பாடுகள் பற்றிய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.





பள்ளிக்கு பெரும் உதவியாக இருந்த வக்கீல் திரு நவமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்


ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்


*பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது*


Friday, April 26, 2024

ஓய்வு பெறும் சத்துணவு மேற்பார்வையாளர்

இன்று ஓய்வு பெறும் சத்துணவு மேற்பார்வையாளர் திருமதி.மா.முத்துலெட்சுமி அவர்கள் 1999 முதல் 4/2024 வரை தனது பணியை எம் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றினார்கள் அன்னாரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பணியாளர்கள் வாழ்க வளமுடன்

Friday, April 5, 2024

2023-24 பள்ளி ஆண்டு விழா

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளி முக்கூடல் பள்ளி ஆண்டு விழா 2024 ஏப்ரல் ஐந்தாம் தேதி பள்ளி வளாகத்தில் வைத்து மாலை 5 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பெற்றோர்கள் குழந்தைகள் ஊர் பெரியவர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தார்கள் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து விழாவை சிறப்பித்தார்கள் விழாவிற்கு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த ஆசிரியை திருமதி கி.நித்திய கல்யாணி திருமதி கோ.பிரவீனா தேவி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்டறிக்கையை திருமதி மூ.சுப்புலட்சுமி ஆசிரியர் அவர்கள் வாசித்தார்கள் அனைவரையும் திருமதி ச.மீனாபூரணி அவர்கள் வரவேற்றார்கள். திருமதி. ப.குலசுமுத்து ஆசிரியர் பரிசு வழங்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். மாணவர்களுக்கு திருமதி சு.இ ராதா அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். விழாவில் அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக ஆசிரியர்கள் செய்திருந்தார்கள் .விழா இனிதே நடைபெற்றது இதற்கு உதவிய தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளி ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் கூடிய வீடியோ தொகுப்பானது கீழே மூன்று பாகங்களாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது ஒவ்வொரு வீடியோ பாகங்களையும் நீங்கள் தொட்டால் அதற்குரிய வீடியோவை யூடியூபில் நீங்கள் பார்க்கலாம் அனைத்து பாடல்களும் மிகவும் நன்றாக வந்துள்ளது வீடியோவும் தெளிவாக உள்ளது இதற்கு உதவிய ஆர்கே ஸ்டுடியோ தம்பி பரத் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி
video link 1

video link 2 click here


video link 3 click here

Friday, March 8, 2024

சர்வமும் நீயே சகலமும் நீயே… மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்!

Women's Day 2024 : சர்வமும் நீயே சகலமும் நீயே… மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்! பெண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி உருவானதன் பின்னணியில் நடந்த மிகப்பெரிய போராட்டங்கள், வரலாறு குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். உலகமெங்கும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பிகில் படத்தில் இருந்து மாதேர மாதேர பாடலை வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்து பெண் தோழிகளுக்கு வாழ்த்து சொல்லலாம் என காத்திருக்கும் நபர்கள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டமா அல்லது போராட்டத்தின் நினைவுகூரலா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும். அதே வேளையில் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. 2024 மகளிர் தினத்தின் கருப்பொருள் 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களில் முதலீடு செய்யுங்கள் : முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்பதாகும். Inspire Inclusion மற்றொரு கருப்பொருளாகும். அதாவது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. மகளிர் தினத்தின் வரலாறு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கூற்றுப்படி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்து சர்வதேச மகளிர் தினம் தோன்றி இருக்கிறது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நினைவாக 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பெண்கள் கடுமையான வேலை சூழலுக்கு எதிராக போராடினர். 1945ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் சர்வதேச ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பின்னர் மார்ச் 8, 1975 அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1977ல் ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்று சர்வதேச மகளிர் தினம் ஒரு உலகளாவிய விடுமுறையாக மாறியது. மகளிர் தினத்தின் முக்கியத்துவம் பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது. என் இனிய அன்பு சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்