இன்று நம் பள்ளியில் முன்னாள் மாணவி செல்வி சக்தி அவர்களுக்கு தந்தை விபத்தில் இருந்தமைக்கான உதவித்தொகை நம் பள்ளியின் மூலம் விண்ணப்பித்து ரூபாய் 50,000 வருங்கால வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்ட பத்திரம் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மூலம் இன்று வழங்கப்பட்டது இந்த வைப்பு நிதியை பெற்றுக்கொடுத்த நம் பள்ளிக்கு பாராட்டுக்கள்👏👏👏👏👏👏
Followers
Monday, November 25, 2019
Thursday, November 14, 2019
குழந்தைகள் தின விழா
இன்று எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா எம்பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்களும் , நமது பாரம்பரிய விளையாட்டான கண்ணாம்பூச்சி, நொண்டி அடித்தல், பாண்டி விளையாடுதல், கொலை கொலையா முந்திரிக்கா, கிச்சுகிச்சு தாம்பாளம், முறுக்கு கடித்தல் , பலூன் உடைத்தல் ,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுக்கள் குழந்தைகளுடன் விளையாட செய்து குழந்தைகளை மகிழ்வித்தனர் . மேலும் இன்று இரவு ஏழு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை நம் அனைத்து தொழில்நுட்ப சாதனங்களான கைபேசி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற காரியங்களை ஒதுக்கிவிட்டு பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடன் நம் இனிமையான தருணங்களை செலவிட பெற்றோரிடம் கூற குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசியர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்கள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர் குழந்தைகள் அனைவரும் தனக்கு விருப்பமான பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள்தினவிழா வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)



















