எமது பள்ளியில் 2024 பொங்கல் விழா இனிதே நடைபெற்றது. விழாவில் சிலம்பு விளையாட்டு எம் பள்ளி மாணவர்கள் விளையாடி காட்டினார்கள். அனைத்து மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு தபால் அட்டை மூலம் பொங்கல் வாழ்த்து மடல் எழுதி தபால் அலுவலகம் மூலம் அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிமாறிக் கொண்டனர். பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.