இன்று எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளியில் 71 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் ,மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தேசிய கொடியேற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றது . மாணவர்களின் பேச்சு ,நடனம் ,கவிதை ,பாடல்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்புரை நடைபெற்றன. விழா சிறப்பாக நடைபெற்றது . மாணவருக்கு இனிப்புகள் வழங்கி 71 ஆவது குடியரசு தின விழா இனிதாக நடைபெற்றது விழாவை ஏற்பாடு செய்த தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவர்கள் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி ஜெய் ஹிந்த்
Followers
Sunday, January 26, 2020
Tuesday, January 21, 2020
முதல் பரிசு நான்காம் வகுப்பு மாணவி உமா பாரதி
அம்பையில் நடந்த விவேகானந்த கேந்திரா போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு நான்காம் வகுப்பு மாணவி உமா பாரதி பெற்றுள்ளார். எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்றுவித்த ஆசிரியருக்கும் வழிகாட்டிய தலைமையாசிரியருக்கு வாழ்த்துக்கள். நன்றி.
Tuesday, January 14, 2020
புகையில்லா போகி 2020 பொங்கல் வாழ்த்து
போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 " என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார்கள் மேலும் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்து பொங்கலிட்டு பொங்கலை சிறப்பித்தனர் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது எஸ் எஸ் கேவி சாலா ஆரம்பப் பள்ளியில் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி
SLOGAN - 1
1 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் .
2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் .
3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் .
3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
SLOGAN - 2
4 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மாசற்ற போகியைக் கொண்டாடுவோம் .
5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் .
6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் .
6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .
Subscribe to:
Posts (Atom)



























