Followers
Sunday, November 26, 2023
Tuesday, October 31, 2023
Tuesday, October 10, 2023
ஆசிரியர்கள் பள்ளிக்கு உதவி செய்தார்கள்
எஸ் எஸ் கே வி சாலா தலைமை ஆசிரியர் திருமதி.வெ.இராஜேஸ்வரி திருமதி.ச.மீனாபூரணி அவர்கள் பள்ளி மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட மேஜை நாற்காலிகள்
Tuesday, September 5, 2023
எஸ்.எஸ் கே. வி சாலா ஆசிரியர் தின வாழ்த்துகள்
கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்
நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள்
என் ஆசிரியர்கள்..!
Tuesday, August 15, 2023
77 வது சுதந்திர தின விழா
இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று நமது பள்ளியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இன்று பள்ளியில் தலைமை ஆசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவரையும் வரவேற்று பேசினார் மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் பேச்சு கவிதை பாட்டு மாறுவேடம் இன்று தனது திறமையை சுதந்திர தின விழாவை முன்னிட்டு காண்பித்தார்கள் ஸ்ரீ நாராயணசாமி கோவில் பொறுப்பாளர்கள் எம் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள் மேலும் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்த நமது பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது விழாவில் திருமதி நித்திய கல்யாணி அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சியில் ஈடுபடுத்தினார்கள் பெற்றோர்கள் தனது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்கள் இறுதியாக திருமதி சுப்புலட்சுமி ஆசிரியை அவர்கள் நன்றியுரை கூறினார்கள் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது சுதந்திர தின விழா இனிதே உமது பள்ளியில் கொண்டாடப்பட்டது
Subscribe to:
Posts (Atom)



















































































