Followers
Friday, April 26, 2024
ஓய்வு பெறும் சத்துணவு மேற்பார்வையாளர்
இன்று ஓய்வு பெறும் சத்துணவு மேற்பார்வையாளர் திருமதி.மா.முத்துலெட்சுமி அவர்கள் 1999 முதல் 4/2024 வரை தனது பணியை எம் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றினார்கள் அன்னாரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டி வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பணியாளர்கள் வாழ்க வளமுடன்
Friday, April 5, 2024
2023-24 பள்ளி ஆண்டு விழா
எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளி முக்கூடல் பள்ளி ஆண்டு விழா 2024 ஏப்ரல் ஐந்தாம் தேதி பள்ளி வளாகத்தில் வைத்து மாலை 5 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பெற்றோர்கள் குழந்தைகள் ஊர் பெரியவர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தார்கள் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து விழாவை சிறப்பித்தார்கள் விழாவிற்கு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த ஆசிரியை திருமதி கி.நித்திய கல்யாணி திருமதி கோ.பிரவீனா தேவி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்டறிக்கையை திருமதி மூ.சுப்புலட்சுமி ஆசிரியர் அவர்கள் வாசித்தார்கள் அனைவரையும் திருமதி ச.மீனாபூரணி அவர்கள் வரவேற்றார்கள். திருமதி. ப.குலசுமுத்து ஆசிரியர் பரிசு வழங்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். மாணவர்களுக்கு திருமதி சு.இ ராதா அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். விழாவில் அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக ஆசிரியர்கள் செய்திருந்தார்கள் .விழா இனிதே நடைபெற்றது இதற்கு உதவிய தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளி ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் கூடிய வீடியோ தொகுப்பானது கீழே மூன்று பாகங்களாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது ஒவ்வொரு வீடியோ பாகங்களையும் நீங்கள் தொட்டால் அதற்குரிய வீடியோவை யூடியூபில் நீங்கள் பார்க்கலாம் அனைத்து பாடல்களும் மிகவும் நன்றாக வந்துள்ளது வீடியோவும் தெளிவாக உள்ளது இதற்கு உதவிய ஆர்கே ஸ்டுடியோ தம்பி பரத் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி
video link 1
video link 2 click here
video link 3 click here
video link 1
video link 2 click here
video link 3 click here
Subscribe to:
Posts (Atom)





















