Followers

Saturday, June 25, 2022

மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 







இன்று 25.06.2022 முக்கூடல் சொக்கலால் ஷத்திரிய வித்யா சாலாவில் வகுப்பு பத்து மற்றும் பன்னிரெண்டாம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் திருமதி வே. ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.பள்ளியின் முன்னாள்   மாணவர்களான திரு இரா.மாரியப்பன், எஸ். கண்ணன், மற்றும் ஹ.சிதம்பரம் ஆகியோர் முறையே தொழில் கல்வி, பொறியியல் கல்வி & கலை மற்றும் அறிவியல்  படிப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர்.ஆசிரியர்கள் திரு. சு. சிவன் பாண்டியன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். திருமதி.கி.நித்திய கல்யாணி வரவேற்புரை வழங்கினார்கள். ஆசிரியர் திரு ஆண்டோ குழந்தை ராஜேஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.   பங்கு பெற்ற மாணவர்கள் இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் தொடங்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் அதை வெகுவிரைவில் பரிசீலிப்பதாக இக்கூட்டத்தில் கூறினர்.ஆலோசனைக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. 🙏🙏🙏🙏