Followers

Tuesday, July 12, 2022

எஸ் எஸ் கே வி சாலா முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம்






இன்று (12.07.2022), திருநெல்வேலி மாவட்டம் , முக்கூடலில் அமைந்துள்ள சொக்கலால் சரஸ்வதி வித்யா சாலா (எஸ்.எஸ்.கே.வி.சாலா) *முன்னாள் மாணவர் பேரவை* கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும் ஆசிரியருமான *திரு. ஹ.சிதம்பரம்* அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் *வரவேற்று* பேசினார். முன்னாள் மாணவரும், தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அதிகாரியுமான *திரு. இரா.மு. மாரியப்பன்* அவர்கள் இந்த Alumni association ( மாணவர் பேரவை) *தொடங்கவதற்கான நேரக்கம் மற்றும் செயல்பாடுகள்* பற்றி விரிவாக எடுத்து கூறினார். முன்னாள் மாணவியும், SBI வங்கி மேலாளருமான *திருமதி.பூமணி* அவர்கள் *முன்னாள் மாணவர் பேரவை* பெயரில் *வங்கி கணக்கு தொடங்குவது* குறித்த ஆலோசனை வழங்கினார். சமூக ஆர்வலரும் முன்னாள் மாணவருமான மரியாதைக்குரிய *திரு. சின்னதம்பி(எ) காமராசர்* தனது பள்ளிக்கால நினைவலைகளை பகிர்ந்தார். எஸ்.எஸ்.கே.வி.சாலா ஆசிரியர் *திரு. ஆண்டோ குழந்தை ராஜேஸ்* *நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.* பள்ளி ஆசிரியை *திருமதி. நித்திய கல்யாணி* *நன்றி* *கூற* நாட்டு பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. *இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.* 1 திருமதி .பூமணி, (SBI, பாளை) 2.திருமதி. இரமா பத்ராவதி, மும்பை 3.திருமதி.சுமதி , ஆசிரியை, வளைகுடா நாடுகள் 4.திரு.பார்த்திபன், சென்னை. 5. திரு.கண்ணன், சென்னை 6.திரு.ப.முருகேசன், Artist 7.திரு Er.கண்ணன், கண்ணா கன்ஸ்ட்ரக்சன் 8.திரு இராமர், ஆட்டோ ஓட்டுநர், 9.திரு ஸ்டீபன், ஆட்டோ ஓட்டுநர் 10.திரு.இரா.மு. மாரியப்பன் 11.திரு ஜெகன் பிரிட்டோ, சட்ட ஆலோசகர் & தொழிலதிபர் 12,ஹ.ராம்குமார் , தட்டச்சர், வணிகவரித்துறை, 13.சின்னதம்பி (எ) காமராசர், 14.சு.மகேஷ் மள்ளர், மாவட்ட தலைவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், நெல்லை. 15. திரு மு.அப்பாத்துரை, விவசாயி 16. ஹ.சிதம்பரம் ஆசிரியர். *இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட* *தீர்மானங்கள்* 1. *சொக்கலால் சரஸ்வதி வித்யா சாலா* (எஸ்.எஸ்.கே.வி.சாலா) *முன்னாள் மாணவர் பேரவை முறைப்படி தொடங்கப்பட்டது.* 2. அதிக உறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுத்தல். 3. ஆண்டு சந்தாவாக ரூ 200/- (இல்லத்தரசிகளுக்கு இது கட்டாயம் இல்லை/ பெண்களுக்கு விதிவிலக்கு ( *optional* )) 4. *முன்னாள் மாணவர் பேரவை* பெயரில் வங்கி எண் ஏற்படுத்தல். 5. *சொக்கலால் சரஸ்வதி வித்யா சாலா* (எஸ்.எஸ்.கே.வி.சாலா) பள்ளியின் *நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தல்* 6 *.போட்டித் தேர்வுக்கும்*, *உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் * பயிற்சி அளிக்க *தனிக் குழுவை* *ஏற்படுத்துதல்* (மாதம் இருமுறை இளைஞர்களுக்கு பயிற்சியளித்தல்) 7. பள்ளியின் *4 & 5 வகுப்பு மாணவர்களுக்கு அறிவுத்திறன் பயிற்சி அளித்தல்.* 8. பள்ளியின் *கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அவரவர் *சொந்த விருப்பத்திற்கேற்ப நிதி* உதவி அளித்தல்* 9. *பள்ளிக்கு நிதி உதவி/ பொருளதவி அளிப்பவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக கெளரவப்படுத்த வேண்டுதல்.*(கல்வெட்டு etc.)

Saturday, July 2, 2022

நூற்றாண்டு தொடக்க விழா

இன்று முக்கூடல் சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்ய சாலா ஆரம்ப பள்ளியில் நூற்றாண்டு விழா தொடக்க விழாவாக கொண்டாடப்பட்டது . இன்று நம் பள்ளியின் நிறுவனர் மற்றும் ஸ்தாபகர் ஐயா உயர்திரு மரியாதைக்குரிய தா. பி.சொக்கலால் ராம் சேட் அவர்களின் உருவ படம் மரியாதைக்குரிய பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி மீனாட்சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குத்து விளக்கு ஏற்றி விழாவினை சிறப்பாக தொடங்கி வைத்தார்கள் விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த 53 மாணவர்களுக்கு தலா ₹500 வீதம் கல்வி உதவித் தொகையாக நூற்றாண்டு விழாவில் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. மேலும்  என்னும் எழுத்தும் எஸ். எஸ். கே. வி. சாலா யூடியூப் சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவிற்கு முன்னாள் மாணவர்களை வழிகாட்டியாகவும் நல்ல ஆலோசராகவும் இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய முன்னாள் மாணவர் திரு ஆதிஷ் அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .விழாவில் முன்னாள் மாணவர்கள் திரு மரியாதைக்குரிய எம் ராஜதுரை அவர்கள், மரியாதைக்குரிய திரு சின்னத்தம்பி அவர்கள், மரியாதைக்குரிய திரு சிதம்பரம் ஆசிரியர் அவர்கள், மரியாதைக்குரிய திரு ஸ்டீபன் அவர்கள் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு முன்னாள் தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய நல்லாசிரியர் திரு. ராமசாமி சார் அவர்களும் தன்னார்வமாக கலந்து கொண்டார்கள். பள்ளியின் பெருமையையும், பள்ளியின் வளர்ச்சியையும், பள்ளியை நிர்வாகித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியினையும் பள்ளி மேலும் மேலும் 200 ,300 ஆண்டுகள் வளர்ச்சி கண்டு முக்கூடல் வட்டாரத்தில் பேர் சொல்லும் பள்ளியாக விளங்க இறைவனை வேண்டி நூற்றாண்டு விழாவை சிறப்பாக பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து தொடங்கி வைத்தார்கள். 

நூற்றாண்டு விழாவின் தலைமை ஆசிரியராக இருக்கும் திருமதி வே ராஜேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். பள்ளியின் சிறப்பம்சங்களையும் பெருமைகளையும் ஆசிரியை திருமதி .கி நித்திய கல்யாணி, அவர்களும் ஆசிரியை திருமதி.ச. மீனாபூரணி அவர்களும் பேசினார்கள். குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. மாறுவேடப்பட்டியில் சுமார் பத்து மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்  .கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ஆசிரியர் திரு அ. அண்டோ குழந்தை ராஜேஷ்   அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முடிவில்   மூத்த ஆசிரியை திருமதி சு. ராதா அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்கள். பத்திரிக்கை நண்பர்கள் திரு அண்ணன் கிரிஸ்டோபர் அவர்களும் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆர் கே ஸ்டுடியோ தம்பி பரத் முன்னாள் மாணவர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் , மதிய உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இணைந்து விழாவினை சிறப்பித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

*நிற்பவர்கள்* : (இடமிருந்து வலம்) (1)ஆசிரியை திருமதி க. கிருபா ராஜாத்தி, (2)திருமதி க. கவிதா , (3)திருமதி .வே சாந்தி, (4)திருமதி. ரா. குளோரியா நான்சி, (5)திருமதி .கோ பிரவீனா தேவி, (6)திருமதி சௌந்தர்யா, (7)திரு சு. சிவன் பாண்டியன், (8) திரு. அண்டோ குழந்தை ராஜேஷ். *அமர்ந்துள்ள வரிசை .*: (இ-வ) (8)திருமதி. ச. மீனா பூரணி, (9)திருமதி .கி .நித்திய கல்யாணி, (10)திருமதி.சு.ராதா , (11)திருமதி. மீனாட்சி , (வட்டார கல்வி அலுவலர்) (12)திருமதி .வெ. ராஜேஸ்வரி(தலைமை ஆசிரியை), (13)திருமதி.சுப்புலட்சுமி (14) திருமதி .பி குலசுமுத்து ,

 




































*அனைவருக்கும் வணக்கம்.* *SSKV SALA* *பணிபுரியும் தற்போதைய ஆசிரிய, ஆசியைகள் மிகவும் பாராட்டதக்கவர்கள்* ( *1* ) *ஏனெனில் அனைவரும் சேர்ந்து இந்த கல்வி ஆண்டில் (2022-23) ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள* *53 மாணவ, மணவிகளுக்கு* *தலா ₹500 வீதம்* ( *ஊக்க* ) *கல்வி* *உதவித் தொகையாக இந்த நூற்றாண்டு விழாவை* *முன்னிட்டு தங்களது சொந்த செலவில் ஆசிரியர், ஆசிரியைகள் வழங்கி* *உள்ளனர்* . ( *2* ) மேலும், *எண்ணும் எழுத்தும் எஸ். எஸ். கே. வி. சாலா* *யூடியூப் சேனல்* *தொடங்கி உள்ளனர்.* ( *3* ) *மேலும், எந்தவித பொருளாதார ஆதரவின்றி ஆசிரியர்கள் , ஆசிரியைகளின்* *சொந்த செலவில் 100 ஆவது ஆண்டின்* *தொடக்கவிழாவினை 02.07.2022 ஆம் தேதி சிறப்பாக நடத்தி,* *மாபெரும் நூற்றாண்டு விழாவிற்கு தயார்* *படுத்தி வருகின்றனர்* . ( *4* ) *முக்கூடல் நகர் மற்றும்* *சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ செல்வங்களுக்காக தங்களது செலவில்* *வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து சிறந்த கல்வியையும், நற்பண்புகளையும் வளர்த்து* *வருகின்றனர்* .. *முன்னாள் மாணவ மாணவர்கள் சார்பாக எஸ்.எஸ்.கே.வி.சாலா* - *வின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், ஆசிரியைகள்* *ஆகியோரை பணிவன்போடு பாராட்டுகிறோம்.* 👏👏👏👏👏💐💐