Followers

Sunday, April 6, 2025

எஸ் கே வி சாலா பள்ளி ஆண்டு விழா 2025

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியின் 2025 ஆண்டு விழா ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளிச் செயலர் *திரு TPSH பார்த்திபன் ராம்சேட்* அவர்களின் வழிகாட்டுதலின்படி சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மகேஷ்கலா அவர்களும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு எஸ் சிவசுப்பிரமணியன் அவர்களும் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி மீனாட்சி மற்றும் திரு எஸ் சுடலைமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஆண்டறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வாசிக்க, திருமதி. கி.நித்தியகல்யாணி ஆசிரியை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பு சேரும் 22 மாணவர்களுக்கு பள்ளி சீருடை யும் சிலேட்டும் பெற்றோருக்கு வாழ்த்துக்களும் பள்ளியின் விழா மேடையில் வைத்து வழங்கப்பட்டது. மற்றும் காலை உணவு திட்டத்திற்கு 1991-1993 batch முன்னாள் மாணவர்கள் மரியாதைக்குரிய திரு ஆதி ஸ் அவர்கள் திரு சிதம்பரம் அவர்கள் திரு ஆதிமூலம் அவர்கள் திரு ஜெகன் அவர்கள் தட்டு டம்ளர் மற்றும் அடுப்பு பள்ளிக்கு வழங்கி பெருமை சேர்த்தார்கள். எங்கள் பள்ளியில் ஓய்வு பெறும் ஆசிரியை திருமதி மூ சுப்புலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் திரு அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். பள்ளி ஆசிரியை திருமதி சு. ராதா, திருமதி ச.மீனா பூரணி,திருமதி ரா.குளோரியா நான்சி திரு சு சுவன் பாண்டியன் திருமதி வே சாந்தி திருமதி கோ பிரவீனா தேவி திருமதி க கவிதா திருமதி க கிருபா ராஜாத்தி அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடைபெற உதவி செய்தார்கள். இறுதியாக ஆசிரியை திருமதி பா குலசுமுத்து அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் 2025 எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவானது இறைவன் அருளால் இனிதே நடைபெற்றது. எம் பள்ளியின் மாணவர்கள் சுமார் 140 பேர் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்கள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் அழகாகவும் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்தது. ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி செயலருக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரியாக ஆசிரியருக்கும் அலுவலக நண்பர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment