Followers

Thursday, January 26, 2023

74 வது குடியரசு தின விழா

திருநெ
ல்வேலி மாவட்டம் முக்கூடல் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியில் இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது .பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி வெ. ராஜேஸ்வரி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள் .பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் திருமதி. ச. மீனா பூரணி திருமதி கி நித்திய கல்யாணி அவர்கள் மாணவர்களுக்கு குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார்கள். மாணவ மாணவியர்களின் பேச்சு கவிதை பாடல் நடிப்பு மற்றும் ஆங்கில சிறப்புரை குடியரசு தின விழா பற்றிய கருத்துக்கள் பகிரப்பட்டது .மாணவளுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக பயிற்சி கொடுத்து மாணவர்களை என் பேச்சு என் மேடை என்று மாணவர்கள் பங்கு பெறும் வகையில் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.விழாவில் பெற்றோர்கள் சிறப்பாக கலந்து கொண்டார்கள் . ஆசிரியர் திரு அன்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்கள். இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியை திருமதி குலசமுத்து அவர்கள் நன்றியுரை கூறினார்கள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment