Followers

Sunday, May 29, 2022

நூற்றாண்டு விழா

 அன்பார்ந்த எஸ் எஸ் கே வி சாலா சொந்தங்களுக்கு வணக்கம் .இந்த குழுவில் இணைந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் . உங்கள் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறோம். நம் பள்ளியானது 2022- 2023 ஆம் ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கிறது .இந்த நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கும் உங்களின் ஈடுபட்டிருக்கும் பள்ளியின் சார்பாக மனதார பாராட்டுகிறோம். நம் பள்ளி சுமார் 100 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள இந்தச் சூழ்நிலையில் இதுவரை பணியாற்றிய ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் பள்ளிக்காக உழைத்த நல்ல உள்ளங்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் நினைவு கூறுகிறோம். இவ்வாறு அனைவரின் உழைப்பில் உருவாகி நல்ல முறையில் இது நாள் வரை இயங்கி வருகிறது. எங்களால் இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும் எங்களுக்கு பள்ளி நல்ல வாய்ப்பு  கொடுத்துள்ளது . அதிலும் சிறப்பாக இந்த நூற்றாண்டு விழாவில் நாங்கள் பணியாற்றுவது என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்த தருணத்தில் எங்கள் பணியானது மாணவர்களின் நலனிலும் பள்ளியின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்களின் பணியானது பள்ளியின் வழிகாட்டுதல் அனைத்தும் முன்னாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு எஸ் ராமசாமி அவர்களின் பயிற்சியும் வழிகாட்டுதலும் இன்றும் பள்ளி அதே நிலையில் செயல்பட்டு வருகிறது, நமது பள்ளி இந்த பாப்பாக்குடி வட்டாரத்தில் சுமார் 456 மாணவர்களை கொண்டு பதிமூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். ஆரம்ப நிலைப் பள்ளிக்கு அலுவலக பணியாளர் அல்லது துப்புரவு பணியாளர் அரசிடமிருந்து நியமனம் செய்யப்பட மாட்டார்கள். அனைத்துமே ஆசிரியர்கள் பொறுப்பில் பள்ளியில் தூய்மை, அலுவலக பணிகள் மற்றும் கற்றல் பணிகள் அனைத்தும் செயல்படும். இதை தற்போது பணிபுரியும் தலைமையாசிரியை வழிகாட்டுதலில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவரவர் கடமைகளை சிறப்பாக செய்து வருகிறோம். மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் முழு முயற்சியுடன் முயன்று வருகிறோம். அதில் மாணவர் சேர்க்கை மிகவும் முக்கியமானது. பாப்பாக்குடி வட்டாரத்தில் நம் பள்ளியில் மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கை 450 ஆக உள்ளது ஆரம்ப நிலைப் பள்ளியில் முதல் இடத்தில் உள்ள பள்ளி நம் பள்ளி என்பதில் பெருமிதம் கொள்வோம். தற்போதைய தலைமை ஆசிரியை 2020 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றார்கள் ஒரு தலைமை ஆசிரியை தமிழக அரசு விருது கொடுப்பது என்றால் அது பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்பாட்டை  கொண்டு அமையும் .எனவே நாம் பள்ளிக்கு அனைத்து ஆசிரியர்களும் தனது முழு உழைப்பையும் கொடுத்து மாணவர்களை கல்வி ஒழுக்கம் விளையாட்டு போட்டி   கலை திறன்களை வளர்க்கும் விதமாக பள்ளியில் அனைத்து செயல்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களின் அக்கறையுடன் மாதம் ரூபாய் 1000 பள்ளிக்குக் கொடுத்து துப்புரவு பணிக்கு மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம் .மேலும் மாணவர்களுக்கு தேவையான மூன்று வகுப்பறைகள் ஆசிரியர்களின் சொந்த செலவில் சுமார் இரண்டு லட்சம் மதிப்பில் அதை சீர் செய்து மாணவர்களின் கல்வி கற்பித்தல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். மேலும் மாணவர்களுக்கு தேவையான ப

தூய்மையான குடிநீர் கிடைக்க தலைமையாசிரியரின் முயற்சியில் ஆர்ஓ சிஸ்டம் வாட்டர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க சேஷசாயி போர்டு கம்பெனி மூலம் பெறப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறோம். மேலும் ஆசிரியர்கள் அவரவர் வகுப்பிற்கு ஸ்மார்ட் டிவி சுமார் 5 நம் பள்ளி உள்ளது. இது அவர்களின் சொந்த செலவில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ப்ரொஜெக்டர் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் விதமாக பயன்படுத்தி வருகிறோம் . பள்ளியில் நடைபெறும் அனைத்து கணினி வேலைகளுக்கும் ஆசிரியரின் சொந்த செலவில் ஒரு லேப்டாப் ஒன்று பயன்பாட்டில் உள்ளது மேலும் திரு ராஜேஷ் ஆசிரியர் அவர்களின் முயற்சியில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள மாணவர்களுக்கு அமர மற்றும் எழுதுவதற்கு மேஜை சுமார் 10 செட் சொந்த செலவில் வழங்கப்பட்டது. மேலும் திருமதி ராதா ஆசிரியர் அவர்களின் உறவினர்களின் மூலமாக     மாணவர்களின் இருக்கை நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளையும் ஆசிரியர்கள் தனது சொந்த செலவிலேயே செய்து வருகிறார்கள். ஆசிரியர்கள் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்தும் மேலும் கடந்த வருடம் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த சுமார் 90 குழந்தைகளுக்கு ரூபாய் 500 வீதம் ஒரு ப்ளூடூத் வாங்குவதற்கான ஏற்பாடு செய்து அதை மாணவர்களுக்கு வழங்கினோம் .அந்த நேரத்தில் மாணவர்களுக்கு மிகவும் கல்வி கற்க பயனுள்ள முறையில் அமைந்தது. அடுத்த சுதந்திர தினவிழா அன்று துப்புரவு பணியாளர்களுக்கு ஆசிரியர்கள் அவர்களின் பணியைப் பாராட்டி உதவி செய்தார்கள் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களுடன் இணைந்து விருந்து உண்டு மகிழ்ந்தோம். அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இருந்து உணவு படைத்து அனைவரும் அதில் இணைந்து அமர்ந்து சாப்பிட்டு வந்தோம். மேலும் அப்போது கஷ்டப்படும் குழந்தைகள் கண்டறிந்து அவருக்கு தேவையான உடைகளை மாணவர்களுக்கு வழங்கி வந்தோம். இவ்வாறு ஆசிரியரின் பங்களிப்பு பள்ளியில் இன்றும் என்றும் தொடரும் என்று தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் .தற்போது இந்த நூற்றாண்டில் பள்ளியின் முக்கியமான தேவையாக உள்ளது கழிப்பறை வசதி. ஒவ்வொரு முறையும் நாங்கள் சுகாதாரச்சான்று வாங்கும் பொழுது எங்களுக்கு கழிப்பறை காணாது மேலும் கழிப்பறை விரிவாக்கங்கள் என்று எங்களுக்கு ஒரு அறிவுரையுடன் சான்று வழங்கி வந்தார்கள். தற்போதும் அந்த சான்று வாங்குவதற்கும் இந்த நூற்றாண்டு விழாவுக்கு பொருத்தமாக அமைய உள்ள நல்ல தருணத்தில் தங்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உங்களால் முடிந்த உதவியை பள்ளிக்கு செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பள்ளியின் சுகாதாரம் பொருத்தது. நம் பள்ளியின் நூற்றாண்டு நினைவாக ஆசிரியர்கள் அனைவரும் ஒரு விழா மேடை தினசரி காலை செயல்பாட்டிற்கு ஒரு மேடை எழுப்பி அதை நூற்றாண்டு மேடையாக நாம் பதிவு செய்ய திட்டமிட்டோம் .அதில் நம் பள்ளியின் நிறுவனர் அவர்களின் நினைவுத் தூண் ஒன்றை அமைத்து அதற்கு கல்வெட்டு அமைத்து அந்த மேடையில் அதை அலங்கரிக்க திட்டமிட்டோம் .தற்போது முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் இதை முன்மொழிந்து இந்த குழுவின் பொறுப்பாளராக உள்ளவர்கள் அதை வழிமொழிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது அனைத்துமே உங்களுடைய தன்னார்வ முயற்சியும் பள்ளியின் மீது கொண்ட பற்றின் மீதும் உள்ள செயல்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே இந்த குழுவை உருவாக்க உறுதுணையாக இருந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு ரா ஆதிஷ் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் .மேலும் பள்ளியில் பார்வையிட்டு எங்களுக்கு துணையாக வந்த முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடைய குழுவானது சிறப்பாக செயல்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் முன்னாள் மாணவர்களின் புகைப்படத்துடன் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட உங்கள் அனைவரின் புகைப்படமும் தேவைப்படுகிறது .அதை வருங்காலங்களில் சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே நல்ல திட்டமிடுதலும் நற் செயலை செய்ய நல்ல சூழ்நிலையும் அமைந்தால் நல்லவர்களின் முயற்சியில் நல்லதே நடக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் கழிப்பறை வசதியை முதலில் சரிசெய்து அதைத் தொடர்ந்து பள்ளிக்கு நூற்றாண்டு மேடை அமைத்து உங்களுடைய முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை பள்ளிக்கு பதிவு செய்யுங்கள். உங்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்  தெரிவித்துக் கொண்டு நூற்றாண்டு விழாவை சிறப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்


இவன்

தலைமை ஆசிரியர்

ஆசிரியர்கள்

மாணவர்கள்🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment