Followers

Thursday, July 15, 2021

ரூ.500 கல்வி உதவித்தொகை






























 முக்கூடல் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் சார்பாக ரூ.500 கல்வி உதவித்தொகை



















  வழங்கும் விழா. சேரன்மகாதேவி கல்வி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், முக்கூடல் சொக்கலால் ஆரம்பப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 450 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் 2021 - 22 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  அரசு தரும் இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முயற்சியாக பள்ளிக்கு என்று தனியாக வெப்சைட் உருவாக்கி அதில் ஆசிரிய ர்கள் பாடம் நடத்தி அந்த வீடியோக்களை பதிவு செய்து மாணவர்களின் வாட்ஸ்- அப் குழுவிற்கு அனுப்பி கல்வி கற்பிக்கப்படுகிறது. கைப்பேசி தாயார் அல்லது தந்தையின் கையில் இருக்கும்போது ஆன்லைன் வகுப்பு சாத்தியமில்லை என்பதால் வளை தளத்தில்இப்பள்ளியின்ல்வெப்சைட்டில்அனைத்து வகுப்பிற்கும் தங்கள் வகுப்பு ஆசிரியர்கள் நடத்திய பாடத்தினை மாணவர்கள் எப்போதும் பார்த்தும் கேட்டும் கல்வி பயின்று வருகிறார்கள் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பயில மாணவர்களை ஊக்குவித்தாலும்  அதை பார்க்காத வறிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க என்ன செய்வது என்று அனைத்து ஆசிரியர்களும் சிந்தித்து மாணவர்களுக்கு ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்குவதற்கு ஊக்குவித்தும் உதவிகள் செய்தும் அதன் மூலம் வாய்ஸ் ரெக்கார்டு மூலம் பதிவு செய்து அதை செவி வழிக் கல்வியாக கல்வி கற்பிக்க எடுத்த முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி.  இந்த ஆண்டு முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சுமார் 80 பேர் உள்ளனர் அனைவருக்கும் ரூ.500 கல்வி உதவித்தொகை அனைத்து ஆசிரியர்களின் உதவியுடன் வழங்கி, ப்ளூடூத் ஸ்பீக்கர், பென் டிரைவ் வாங்கி ஆசிரியர்களிடம் பாடங்களை காப்பி செய்து மாணவர்கள் கல்வி கற்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் கண் பாதிப்பு இல்லாமல் செவி வழிக் கல்வியாக பயில இந்த உதவித்தொகை பயன்படும் அதன் மூலம் மாணவர்களின் கல்வி மேம்பட தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள் buகொண்டு வந்த திட்டம் செவிவழிக் கல்வி திட்டம் ஆகும் இதில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களை சந்தித்து  பயின்று வருவதுடன் ஆசிரியர்களும் அவர்களுக்கு தகுந்தார்போல் ரெக்கார்டு செய்து அனுப்பி வருகிறார்கள்.

கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், மற்றும் 30 ஆண்டுகள் பணி செய்து பணியாற்றிவரும் சுப்புலட்சுமி ஆசிரியைக்கு பாராட்டு விழாவும், மாண வர்களின் பெற்றோர்களுக்குசெல்போன் மற்றும் ப்ளூடூத் பயன்பாடு பற்றிய அறி வுரைகளும் வழங்கப்பட்டது. இந்நிக ழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கல்யாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். 30 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியை திருமதி எம் சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கிய ஆசிரியை திருமதி நித்திய கல்யாணி திருமதி மீனா பூரணி திருமதி குலசு முத்து நன்றியுரை வழங்கிய திருமதி ராதா மற்றும் ஆசிரியர் திரு.அ.அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை வட்டார கல்வி அலுவலர் கல்யாணி திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரின் மூலம் ஆசிரியர்கள் ராஜேஷ்,  சிவன்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment